பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் Shaukat Ali என்பவரின் வழக்கை விசாரிக்கும் போது யூடியூப்பை தடை செய்வதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கை நீதிபதிகள் காசி முஹம்மது அமீன், நீதிபதி முஷீர் ஆலம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
அப்போது, யூடியூபில் ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடு வீடீயோக்கள் பரப்புவதல்ல , ஆனால் யூடியூபில் குற்றம், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு எதிராக மக்களைத் தூண்டுவதற்காக வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
இதுபோன்ற கட்டுப்பாடற்ற சமூக ஊடகங்களை பாகிஸ்தான் நீதிபதிகள் கடுமையாக எதிர்த்தனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிபதி அமீன் குறிப்பிட்டார். எங்கள் சம்பளம் மக்களின் பணத்திலிருந்து செலுத்தப்படுகிறது, எங்கள் முடிவுகள் மற்றும் எங்கள் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்ப அவர்களுக்கு உரிமை உண்டு, என்றார். இருப்பினும், பாகிஸ்தான் அரசியலமைப்பு நீதிபதிகளுக்கு தனியுரிமைக்கான உரிமையை வழங்குகிறது.
நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் குடும்ப உறுப்பினர்களும் யூடியூப்பால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கூறினர். யூடியூப் போன்ற தளங்களில் நீதிபதிகள் கேலி செய்யப்படுகிறார்கள். அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்.ஐ.ஏ) என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
பல நாடுகளில் யூடியூப் தடை செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி முஷீர் ஆலம் தெரிவித்தார். இதற்கு முன்னர் பல்வேறு சமூக ஊடக தளங்களும், வலைத்தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானில் யூடியூப்பை தடைசெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் ஆபாசத்தை பரப்புவதாகக் குற்றம் சாட்டி, சீன செயலியான பிகோ(bigo)வை தடைசெய்தது. மேலும், டிக்டோக்கை எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…