கேஜிஎஃப் படத்தின் அறிவிப்பை தொடர்ந்து சலார் படத்திற்கான அறிவிப்பு..?

பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சலார் படத்திற்கான ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில்நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தினையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம், இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 3.25 மணிக்கு வெளியாகும் என்று ஹொம்பாளே ஃபிலிம்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
We are here to announce the worldwide theatrical release of #Salaar ????
Stay Tuned.#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/zEHFRnG5Tg
— Hombale Films (@hombalefilms) February 28, 2021
மேலும் நடிகர் பிரபாஸ் கைவசம் தற்போது ராதே ஷ்யாம், நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம்,ஆதிபுருஷ் ஆகிய படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.