கமலா ஹாரிஸை தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் பெண் ஜோ பைடன் பணிக்குழுவில் நியமனம்.!
ஜோ பிடனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்தியா வம்சாவளியை சேர்ந்த செலின் கவுண்டர்.
தமிழ்நாடு: இவரது, தந்தை நடராஜன் ஈரோடு மாவட்டதின் மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் உயர் பதவிக்கு தேர்வு ஆகியுள்ளது தமிழக மாநிலத்திற்கும் ஈரோடு மாவட்ட கிராமத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செலின் கவுண்டர் ஆற்றிய பணிகள்:
செலின் கவுண்டர்: எச்.ஐ.வி / தொற்று நோய்கள் நிபுணர் மற்றும் இன்டர்னிஸ்ட், பத்திரிகையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கினியாவில் எபோலா உதவி ஊழியராக இரண்டு மாதங்கள் தன்னார்வத்துடன் செலவிட்டார்.
அடுத்ததாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் பி.ஏ., ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்திலிருந்து தொற்றுநோயியல் துறையில் மாஸ்டர் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உள் மருத்துவத்தில் பயிற்சியாளராகவும், அதே நேரத்தில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களில் பிந்தைய முனைவர் பட்டம் பெற்றவராகவும் இருந்தார். மேலும், அவர் 2016 இல் அமெரிக்காவின் தொற்று நோய்கள் சங்கத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொரோனா பணிக்குழுவின் உறுப்பினர்:
இந்நிலையில், நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். கொரோனாவை டிரம்ப் சரியாக கையாள வில்லை என்பதால் அவர் தொல்வி அடைந்தார். இதனால் ஜோ பிடன் தான் வெற்றி பெற்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவை நியமித்தார். அதில், இந்தியா வம்சாவளியை சேர்ந்த நியூயார்க் பல்கலைக்கழக கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியரான செலின் கவுண்டர் ஜோ பிடனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.