தனுஷை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் கர்ணன் பட நடிகை..??

Default Image

கார்த்தி நடிக்கவுள்ள சர்தார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளார். 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையில் ஒருவராக வலம்வருபவர் நடிகை ரஜிஷா விஜயன். இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படம்  ரஜிஷா விஜயனுக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. மேலும் தற்போது தனுஷ்க்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதாவது, நடிகர் கார்த்தியின் 22வது திரைப்படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன்  இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்திற்கு எசர்தார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் கார்த்திக்க்கு ஜோடியாக நடிகை  ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் இரண்டு வேடங்களில் நடிக்கிறார், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும் படத்திற்கான படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்