பெற்றோர்களே..!கொரானா மூன்றாம் அலையிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!

Default Image

கொரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில்,மத்திய ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி,இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

எனவே,கொரானாவின் மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம்:

அந்த வகையில்,முதலாவதாக குழந்தைகளை வெளியே விடக்கூடாது.அதன்பின்னர்,குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பழங்கள்,காய்கறிகள்,பயறு வகைகள்,குறிப்பாக: பீன்ஸ் மக்காச்சோளம், தினை, ஓட்ஸ்,கோதுமை, இறைச்சி,மீன், முட்டை மற்றும் பால் ஆகியவை பின்வருமாறு கொடுக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் சமைத்த காய்கறிகள்:

தினமும்,2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1 கப்,4 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1.5 – 2 கப்.14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 2.5 – 3 கப் கொடுக்க வேண்டும்.

புரதச்சத்து:

சால்மன்,மத்தி,கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் மற்றும் இறைச்சி ஆகியவை வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும்.(குறிப்பு:5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த முறையில் கொடுக்க வேண்டும்)

பால் :

தினமும் காலை,மாலை,இரவு என 3 வேளையும் முழு டம்ளர் அளவில் பால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இதர :

  • தினமும்,நிலவேம்பு அல்லது கபசுரக் குடிநீர் கசாயம் குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும்.
  • தினமும்,இரண்டு அல்லது மூன்று லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.ஏனெனில்,தண்ணீர் குடிப்பதால்,இரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கடத்தப்பட்டு உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.மேலும் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
  • மீன் எண்ணெய்,வெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்றவைகளில் சமைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
  • உடைகளை கிருமிநாசினியும் கல் உப்பும் கலந்த தண்ணீரில் ஊறவைத்துத் துவைத்து பயன்படுத்துங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்