ஜப்பானில் உள்ள ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி, அதனை பறக்கவிடப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றது.
சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைக்கவும், அதற்கு மாற்றுத் தீர்வு காணவும், போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும், உலக நாடுகள் பல பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை உருவாகியுள்ளது. அதற்கு எஸ்.டி- 03 என பெயரிட்டனர்.
இந்த பறக்கும் கார் பார்ப்பதற்கு பெரிய சைஸ் ட்ரான் போல காட்சியளிக்கிறது. இந்த காரில் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பறக்கும் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பறக்கும் கார், தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை மேல் எழும்பி 4 நிமிடங்கள் வானத்தில் பறந்தது.
இதுகுறித்து ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், இந்த பறக்கும் காரில் அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறன் கொண்டுள்ளது எனவும், அதனை 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டதாக விரைவில் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்த பறக்கும் கார் இருந்த இடத்தில் இருந்தே அப்படியே மேல் எழும்புவதற்கும், தரை இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதாகவும், அதற்கென ஓடுபாதை எதுவும் தேவையில்லை என கூறினார்.
அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு இது உதவுவதாகவும், இந்த பறக்கும் கார், வரும் 2023- ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், இதன் பாதுகாப்பு விஷயங்கள் தொடர்ந்து சவாலாக இருப்பதாக கூறினார்.
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…