ஜப்பான்னில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை வெற்றி.. 2023- ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்!

Default Image

ஜப்பானில் உள்ள ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி, அதனை பறக்கவிடப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றது.

சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைக்கவும், அதற்கு மாற்றுத் தீர்வு காணவும், போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும், உலக நாடுகள் பல பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை உருவாகியுள்ளது. அதற்கு எஸ்.டி- 03 என பெயரிட்டனர்.

இந்த பறக்கும் கார் பார்ப்பதற்கு பெரிய சைஸ் ட்ரான் போல காட்சியளிக்கிறது. இந்த காரில் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பறக்கும் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பறக்கும் கார், தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை மேல் எழும்பி 4 நிமிடங்கள் வானத்தில் பறந்தது.

இதுகுறித்து ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், இந்த பறக்கும் காரில் அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறன் கொண்டுள்ளது எனவும், அதனை 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டதாக விரைவில் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த பறக்கும் கார் இருந்த இடத்தில் இருந்தே அப்படியே மேல் எழும்புவதற்கும், தரை இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதாகவும், அதற்கென ஓடுபாதை எதுவும் தேவையில்லை என கூறினார்.

அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு இது உதவுவதாகவும், இந்த பறக்கும் கார், வரும் 2023- ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், இதன் பாதுகாப்பு விஷயங்கள் தொடர்ந்து சவாலாக இருப்பதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
pm modi CM MK STALIN
Allu Arjun house stone pelters
NEET exam - Supreme court of India
Smriti Mandhana
TN Minister Anbil Mahesh
Sunny Leone shony sins scam