ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கு..!-6 பேர் பலி, 30 பேர் மாயம்..!
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துகொண்டது. நேற்றிரவு பெய்த மழை காரணத்தால் ரைன்லேண்ட்-பேலட்டினேட் என்ற நகரில் உள்ள ஸ்கல்டு பகுதியில் இருக்கும் 6 குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், 25 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வெள்ளப்பாதிப்பால் அப்பகுதியில் 30 பேர் காணாமல் போய் உள்ளனர். மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் காவல்துறையினருடன் தற்போது ஜெர்மனியின் ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.