உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் வாரை பலியாகினர்.
விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் அன் 26” ரக விமானம் சுஹூவ் நகரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.விமானத்தில் விமானப்படை வீரர்கள் 20 பேரும், விமானி உட்பட விமான ஊழியர்கள் 7 பேரும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரை இறக்க முடிவு செய்தார். எனவே, ராணுவ விமான நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க அவர் முயற்சித்தார்.ஆனால் அதற்குள் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோரம் உள்ள புதரில் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானப்படை வீரர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…