இஸ்லாமிய சகோதரர் செய்த நெகிழ்ச்சியான செயல்! குவியும் பாராட்டுக்கள்!
இஸ்லாமிய சகோதரர் செய்த நெகிழ்ச்சியான செயல்.
இன்று சாதி, மதம், இனம் என வேற்றுமையோடு பழகுபவர்கள் பலர் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் கலைந்து , ஒற்றுமையுடன் வாழும் சிலரும் இந்த இந்தியாவில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிராவின் அஹமதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் இஸ்லாமியர் ஒருவர், பல வருடங்களுக்கு முன் இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரிகளை அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்து வளர்த்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர்களுக்கு அனைத்து செலவுகளையும் ஏற்று இந்து முறைப்படி திருணம் செய்து வைத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.