பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் ராஜினாமா
- ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் பிக்பாஸ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு பயிற்சியாளராக பதவி வகித்து வந்த ஸ்டீபன் பிளமிங் கடந்த நான்கு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார்.
- சென்னை மற்றும் மெல்போர்ன் இரு அணிகளின் பொறுப்பில் இருப்பது, வயதாகின்ற காரணத்தால் மிகுந்த சுமையாக கருதுகிறேன்.
பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் ஸ்டீபன் பிளமிங்.
ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் பிக்பாஸ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு பயிற்சியாளராக பதவி வகித்து வந்த ஸ்டீபன் பிளமிங் கடந்த நான்கு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார்.
இந்நிலையில், இன்று தான் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிளம்மிங் கூறுகையில் சென்னை மற்றும் மெல்போர்ன் இரு அணிகளின் பொறுப்பில் இருப்பது, வயதாகின்ற காரணத்தால் மிகுந்த சுமையாக கருதுகிறேன். இனி குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க ஆசைப்படுகிறேன். இதனால், இது தான் விலகுவதற்கான சரியான நேரம் என தெரிவித்தார்.