இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – மீனவர்கள்  பிரச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு

Default Image

இலங்கை பிரதமர்  மகிந்த ராஜபக்சே மற்றும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே இன்று  நடைபெறும்  உச்சிமாநாட்டில்  மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு உள்ளது.

இலங்கை பிரதமர்  ராஜபக்சேவின் ஊடக அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் ,பிரதமர் ராஜபக்சே  உள்ளூர் மீன்பிடி அமைப்புகளுடன் ஒரு பெரிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை ஒரு முக்கிய விவாதமாக இருக்கும் என்றும் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பிரதமருடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியின் முயற்சியின் பேரில் இந்த  உச்சிமாநாடு காணொலி மூலம் நடைபெறுகிறது.

கொரோனா பரவியத்திலிருந்து , இந்திய அதிகாரிகள் தங்கள் மீனவர்களை விரட்டியடிப்பதாக   மீனவ அமைப்பினர்  பிரதமரிடம் கூறியதாக ராஜபக்சே  அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இந்தியத் தலைவரிடம் எடுத்துக்  கூறப்படும் என்று  என்றும் அவர்களுக்கு ராஜபக்சே உறுதியளித்தார்.இலங்கை எல்லை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி   மீன்பிடிப்பது  என்பது தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது.கடந்த காலங்களில் இரு  நாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இரு தலைவர்களுக்கிடையேயான   இருதரப்பு  இடையேயான உறவு, அரசியல், பொருளாதாரம் , நிதி, மேம்பாடு, பாதுகாப்பு , கல்வி, சுற்றுலா , கலாச்சாரம்,  பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை  நடைபெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இலங்கை வெளியுறவு அமைச்சகம்  வெளியிட்ட  அறிக்கையில் ,
உச்சிமாநாட்டில் தொடர்புடைய  அமைச்சர்கள் மற்றும் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும்  பங்கேற்பார்கள். கடந்த மாதம் பிரதமராக பதவியேற்ற பின்னர் ஒரு வெளிநாட்டுத் தலைவருடன் பிரதமர் ராஜபக்சே நடத்தும்  முதல்  உச்சிமாநாடு இதுவாகும். பயங்கரவாத எதிர்ப்பு  ,ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள், ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை உயர்த்துவதுடன், இலங்கையில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும்  ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழ் பிரச்சினையும் பேச்சுவார்த்தையில் இடம் பெற வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்