நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற ஜூலை 16ம் தேதி வெளியாகிவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் டாக்டர், இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் முதல் பாடலை வருகின்ற 16ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது , அதற்கான சிறிய ப்ரோமோ விடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதனால் ரசிகர்கள் தற்பொழுது உற்சாகத்தில் உள்ளார்கள், மேலும் இந்த திரைப்படத்தில் ரிலீஸ் தேதிக்கான அப்டேட்யும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…