அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பெண்ணுக்கு மரணதண்டனை!

Default Image

அமெரிக்காவில் 70 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு இந்தாண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் 43 வயதாகும் லிசா மாண்ட்கோமேரி என்ற பெண் கர்ப்பமடையாத காரணத்தினால், 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 வயது கர்ப்பிணியான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். அதுமட்டுமின்றி, அவரது வயிற்றை கிழித்து, அவரது கருவிலிருந்த குழந்தையை திருடி, தன் வீட்டிற்கு கொண்டுசென்று தன் குழந்தை போல காட்டினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட லிசாவை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த குழந்தையை மீட்டு பாபி ஜோவின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா ஜோ ஸ்டின்னெட் என்ற அந்த குழந்தைக்கு இப்போது 16 வயதாகிறது. மேலும், குற்றம் சுமத்தப்பட்ட லிசாக்கு தற்பொழுது 52 வயது ஆகியது.

இந்நிலையில், லிசாவுவுக்கு விஷ ஊசி போட்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி இந்தியானா மாகாணத்தில் உள்ள டெரே ஹூட் எனும் இடத்தில மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 1953 ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் பெண்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்கவில்லை.

தற்பொழுது 70 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அமெரிக்க அரசு லிசாக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, அதிபர் டிரம்ப் ஆட்சி நடத்திய 17 ஆண்டுகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது அது முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்