முதல் நாள் வசூல் : எந்த படம் அதிகம்.? திரௌபதியா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலா?
தமிழ் சினிமாவில் நேற்று 2 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் துல்கர் சல்மான் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியான தமிழ் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் துல்கரின் 25வது படமாகும். மேலும் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார். மற்றோரு படமான வண்ணாரப் பேட்டை படத்தை இயக்கிய மோகன் என்பவர் திரௌபதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த 2 படமே வெவ்வேறு விசயத்தை அம்பலப்படுத்தியுள்ளன. சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 லட்சம் என தகவல் வந்துள்ளது.
திரௌபதி படத்திற்கு டிரைலர் வெளியான போதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சர்ச்சைகளுக்கிடையே படம் வெளியாகி நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இது போலி காதல் திருமணத்திற்கும், ஆணவ கொலைகளுக்குமான கருத்தை முன்வைக்கிறது. அதே போல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இக்காலத்தில் நவீன் முறையில் காதல் மோசடிகளையும், பணமோசடிகளையும் கருவாக கொண்டுள்ளது. இப்படம் தமிழகத்தில் சுமார் 330 திரையரங்குகளில் வெளியாகி ரூ.1 கோடி வசூல் அடித்துள்ளது என்றும் சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 லட்சம் என கூறப்படுகிறது.