பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இதனை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் தீவிரப்படுத்தியுள்ளார். அப்படிதான் இன்று பேரணியும் நடப்பட்ட்டது. அப்போது திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இம்ரான் கானுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் தற்போது நன்றாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஆளும் கட்சி, தனது கட்சிக்கும், பாக்கிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே மோதலை உருவாக்கி வருவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது தீவிரவாத கும்பலா? ராணுவமா? பாகிஸ்தான் போலீசாரா? என இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…