பாரிஸில் 850 வருட பழமையான தேவாலயத்தில் தீ விபத்து
பாரிஸில் உள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரடேம் கதீட்ரல். இந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் சிகரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.
நோட்ரடேம் கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழப்புகள் மற்றும் தீயில் சிக்கியவர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இச்சம்பவம் குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த தீ விபத்து பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஹெலிகாப்டர் மூலமாக தீயை அணைக்க முயற்சி செய்யுங்கள்’ என தெரிவித்துள்ளார்.