துபாய் பட்டத்து இளவரசர் சைக்கிள் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, திடீரென இரண்டு நெருப்புக் கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடியுள்ளன.
துபாயில் அல் மர்மும் என்ற ஒரு இயற்கை வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காடுகள் மற்றும் பாலைவன ஈரநிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அல் குத்ரா ஏரி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பகுதி சைக்கிள் பாதை, நடைபாதை, புகைப்படங்கள் எடுக்க வடிவமைப்புகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாகும்.
பலரும், அடிக்கடி இந்தப் பாதைகளில் சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனையடுத்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோர் அடிக்கடி இப்பகுதியில், சைக்கிளில் பயணம் மேற்கொள்வதுண்டு.
அவர் சமீபத்தில் சைக்கிள் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, திடீரென இரண்டு நெருப்புக் கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடியுள்ளன. இந்த காட்சியை அவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இதில் பலர் நெருப்புக்கோழி உடன் பந்தயம் நடைபெற்றது போல இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…