இப்படி ஒரு ட்ரைலரை நாங்க எதிர்பார்க்கல.! மிரட்டிய கெளதம் மேனன் – விஷ்ணு விஷால்.!

விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார்.
முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். இவர் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் FIR.
தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி இந்த படம் விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இஸ்லாமிய இளைஞராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். கெளதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தினை வாங்கி ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ட்ரைலரை மலையாள நடிகர் பிரிதிவிராஜ் வெளியிட்டுள்ளார். படத்தின் ட்ரைலர் விறுவிறுப்பாகவும், ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025