'பாலியல் குற்றங்கள்' குறித்து சர்ச்சை கருத்து! இயக்குனர் கே.பாக்கியராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு!
அண்மையில் கருத்துக்களை பதிவு செய் எனும் படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான கருத்தை முன்வைத்தார். அவர் பேசும்போது, ‘ பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை அந்த ஆண்கள் பயன்படுத்தி கொண்டனர். எனவும், இதற்கு ஆண்கள் மட்டும் பொறுப்பல்ல. அந்த பெண்களிடமும் தவறு உள்ளது எனவும் பேசினார்.
‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்றும் தெரிவித்தார். பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆண் சின்ன வீடு வைத்து இருந்தாலும், தான் கட்டிய முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை எனவும், ஆனால், ஒரு பெண் நடத்தை சரியில்லாமல் போனால் தன் கணவனை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறாள் எனவும் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநில மகளிர் அமைப்பினர், ஆந்திர மாநில காவல் நிலையத்தில் கே.பாக்கிராஜ் கூறிய கருத்துக்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.