ஆஸ்திரியாவில் தவறான காலை அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு அபராதம் ..!
தவறான காலை அகற்றிய அறுவை சிகிச்சை நிபுணருக்கு சுமார் ரூ. 2.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வயதான நோயாளியின் தவறான காலை அகற்றிய அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆஸ்திரிய நீதிமன்றம் அபராதம் 2,700 யூரோக்கள் (சுமார் ₹2.29 லட்சம்) விதித்தது. விதித்துள்ளது என்று வடக்கு நகரமான லின்ஸில் உள்ள நகர நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
ஃப்ரீஸ்டாட் நகரில் மே மாதம் 43 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு 82 வயதான நோயாளியின் இடது காலைக்கு பதிலாக வலது காலை அகற்றினார். கால் அகற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தவறு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்திவந்தது. அப்போது, அறுவை சிகிச்சை நிபுணருக்கு அபராதம் 2,700 யூரோக்கள் (சுமார் ₹2.29 லட்சம்) விதித்தது.
மேலும், நோயாளி இறந்ததால் அவரின் குடும்பத்திற்கு 5,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கப்பட்டது.