சமந்தா பயன்படுத்தி வரும் பெல்ட் மற்றும் ஹேன்ட் பேக்களின் விலை தெரிய வந்துள்ளது.
நடிகை, நடிகைகள் பயன்படுத்தும் ஆடைகள் முதல் காரணிகளில் விலைகளை கேட்டால் அனைவருமே அசந்து போய் விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் விலை மதிப்புடையதாக இருக்கும். அதிலும் சில ரசிகர்கள் அதனை அறிவதற்கு ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிலையில் தற்போது சமந்தா அவர்கள் பயன்படுத்தும் பெல்ட் மற்றும் ஹேன்ட் பேக்களின் விலையை கேட்டு ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் அவர் விரும்பி பயன்படுத்தும் லூயிஸ் வியூட்டன் கிராஸ் பாடி பேக்கின் விலை ரூ. 2,17,000 என்று தெரிய வந்துள்ளது. அதை போன்று அவர் பயன்படுத்தி வரும் மற்றொரு ஹேன்ட் பேக்கான கஸ்ஸி மார்மோண்ட் பேக்கின் விலை ரூ. 1,95,000 என்று கூறப்படுகிறது. ஹேன்ட் பேக்களை தவிர அவர் விரும்பி பயன்படுத்தும் கஸ்ஸி பெல்டின் விலை ரூ40,000. தற்போது அவர் பயன்படுத்தி வரும் மெய்சன் வேலண்டினோ பெல்டின் விலை ரூ. 72,000 ஆகும். மேலும் சமந்தா அவர்கள் பயன்படுத்தும் காலணிகளின் விலையும் லட்சக்கணக்காகும் என்று கூறப்படுகிறது.
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…