பிரபஞ்சத்தின் இளம் வயது பிரதமராக இளம்பெண் பதவியேற்பு..!எந்த நாட்டுக்கு தெரியுமா..?
- உலகில் மிகவும் இளம் வயதில் பிரதமராக இளம் பெண் ஒருவர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.
- உலகின் முதல் மிக இளம் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
யார் இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் என்றால் பின்லாந்தின் தற்போதைய பிரதமராக மிக இளம் வயதில் பதவியேற்றுள்ள சன்னா மரினா தான்.
வடக்கு ஐரோப்பாவில் சேர்ந்த பின்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இதில் அதிக இடங்களை தன் வசப்படுத்திய சமூக ஐனநாயகக் கட்சி 5 கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் பின்லாந்தின் அதிபராக இருந்து வந்த ஆண்டி ரின்னி பதவி விலகினார்.சமூக ஜனநாயக கட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சன்னா மரினா பிரதமராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
இதனை அடுத்து பின்லாந்து பார்லியில் ஓட்டெடுப்பு நடந்தது அதில் சன்னா மரியானவிற்கு ஆதரவாக 90 பேரும்,எதிராக 70 பேரும் வாக்களித்தனர்.ஓட்டெடுப்பில் வெற்றிப் பெற்ற சன்னாவிடம் பின்லாந்து அதிபர் சாலி நினிஸ்டோ முறைப்படி பிரதமர் பதவியை ஒப்படைத்தார்.
இதன் பின்னர் பின்லாந்தின் பிரதமராக 34 வயதே ஆன சன்னா மரினா பதவியேற்றார்.இந்த பிரபஞ்சத்தில் மிக இளம் வயதில் பிரதமராக பதவியேற்ற இளம்பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவருக்கு உலகத் தலைவர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நாமும் அவருடைய கடமை சிறக்க வாழ்த்துவோம்..!இளம் வயதில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரும் சாதனை படைத்து உலகை தன்பால் திரும்பி பார்க்க வைத்துள்ளார் சன்னா மரின் என்பது குறிப்பிடத்தக்கது.