தனுஷ் நடிப்பில் உருவாகும் D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த D43 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், D43 திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், வருகின்ற ஜூலை மாதம் முதல் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். இந்தப் படத்திற்கான 70% காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…