ஐஎஸ்எல் சாம்பியன் யார்?நம்ம சென்னையின் எப்சியை நம்பி இருக்கும் ரசிகர்கள்?
சென்னை – பெங்களூரு அணிகள் நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. இதில் சென்னை அணி ஏற்கனவே ஒருமுறை கோப்பை வென்றுள்ளதால் 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பெங்களூரு அணி முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.
பெங்களூரு அணியில் இந்திய வீரர் சுனில் சேத்ரி தலைமையில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. அவர் தலைமையில் விளையாடும் முதல் தொடர் இது, முதல் தொடரிலேயே அந்த அணி இறுதி போட்டி வரை வந்த உற்சாகத்தில் விளையாடுகின்றனர். இப்போட்டியில் சுனில் சேத்ரியின் முயற்சிகளை தடுத்து விட்டாலே சென்னை எளிதாக வென்று விடலாம்.லீக் போட்டிகளை பொறுத்தவரை பெங்களூரு அணி 18 இல் 13 இல் வென்று அட்டகாசமாக வந்துள்ளது. ஆனால் சென்னை போராடித்தான் பிலேஆஃப் சுற்றுக்கு வந்தது. எனவே சென்னை அணி எச்சரிக்கையாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களுருவில் தொடங்குகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.