விடுதலை வேட்கையை நவீன யுகத்திற்கும் கடத்திய திரை படைப்புகள்…

Default Image

நம் நாட்டிற்கு சுதந்திரம் என்பது எளிதில் ஏதும் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கானோரின் போராட்டம், லட்சக்கணக்கரின் தியாகங்கள் நிறைந்தது நமது சுதந்திர சுவாசக்காற்று.

இதனை புத்தக வடிவில் வெளியிட்டு கூறினாலும், நவீன உலகுக்கு புரியும் வண்ணம் திரைப்படங்கள் மூலம் எடுத்துக்கூறிய போதே வெகுஜன மக்களுக்கும் நம் தலைவர்களின் தியாகங்கள் தெரியவந்தது என்றே கூற வேண்டும். அப்படி பாராட்டப்பட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களை இங்கே காணலாம் .

கப்பலோட்டிய தமிழன் (1961) :

இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கற்றிய முக்கிய தலைவர்களுள் ஒருவரான வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கப்பலோட்டிய தமிழன். இந்த திரைப்படத்தை பி.ஆர்.பந்தலு இயக்கியிருந்தார். சிவாஜி கணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் ஆகியோர் இதில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 1961 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) :

        ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அவர்களுக்கு வரிகட்ட மறுத்த பாளையக்காரர்கள் மிக முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் பெயரைக் கூறிய உடன் நமக்கு ஞாபகம் வருவது சிவாஜி கணேசன் பேசும் அந்த நீளமான வசனம் தான். அந்த அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனை இன்னும் நம் மனதிற்குள் ஆழமாய் பதித்தது சிவாஜி கணேசனும், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் தான்.  இந்தப் படத்தையும் பி.ஆர்.பந்தலு இயக்கியிருந்தார். 1959 ஆம் ஆண்டு இப் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

பாரதி (2000):


தனது இலக்கிய பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் விடுதலை வேட்கையை புகுத்தியவர் மகாகவி பாரதியார். இவரது வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பாரதி. ஞான ராஜசேகரன் இயக்க, இளையராஜா இசை அமைக்க, சாயாஜி சிண்டே, தேவயானி, நிழல்கள் ரவி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். 2000இல் இப்படம் வெளியானது.

பெரியார் (2007) :


தமிழகத்தின் ஜாதி எதிர்ப்பு, பெண்களுக்கு முன்னுரிமை, கல்வி உரிமை என பல  முன்னேற்றங்களை நாம் குறிப்பிடுகையில் இவரது பெயரும் தானாக வந்துவிடும். அவர்தான் ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார். இதில் பெரியாராக சத்யராஜ் நடித்திருப்பார். ஞான ராஜசேகரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.

காமராஜ் (2004) :

தமிழகத்தில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பற்றிய திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதனை ஏ.பாலகிருஷ்ணன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். ஜே.மகேந்திரன் என்பவர் இப்படத்தில் காமராஜராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை முழு மூச்சாக செயல்படுத்தியவர் காமராஜர். மேலும், விடுதலை போராட்டத்திலும் முக்கிய பங்காற்றி தனது இளமை காலத்தை சிறையில் கழித்தவரும் காமராஜர் தான். அவரது வாழ்வை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்