தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழந்தது திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன்(50) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை கோவாவில் இறந்ததாக தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவால் திரைப்பட துறையினர் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் மிகவும் திறமையானவர் என்றும் இவரை இழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
ரியான் ஸ்டீபன் இந்தூ கி ஜவானி என்ற படத்தையும் தேவி என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த குறும்படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன் மற்றும் நேஹா துபியா ஆகியோர் நடித்துள்ளனர்.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கியாரா அத்வானி, வருண் தவான், பர்ஹான் அக்தர், தியா மிர்ஷா, மிலாப் சவேரி, ராகுல் தேவ் ஆகிய பிரபலங்கள் தங்களது இரங்கலை அவரின் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…