பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் தகவல்.
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார், தற்போது தளபதி விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் பெருமளவு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது ‘பீஸ்ட்’.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகளுக்கு தளர்வு ஏற்படும் பட்சத்தில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை ஒட்டி திரையிட திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே, பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ’தளபதி 66’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமனும், நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதுவரைக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இதைப்பற்றி வெளியாகவில்லை. இந்த நிலையில், ஊடகத்துக்கு பேட்டியளித்த தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தளபதி 66 படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டியிருக்கிறேன் என நடிகர் விஜய் தெரிவித்தாகவும் கூறினார்.
மேலும், கொரோனா பரவலை பொறுத்து படத்தை வருகின்ற தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், தளபதி 66 படத்தை குறித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…