அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் 3 நாட்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் , ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்னும் 3 நாட்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மற்ற அப்டேட்டுகள் அறிவிக்க அதிகவாய்ப்புகள் உள்ளதால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…