வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவு.!
சிம்பு – கெளதம் கூட்டணியில் உருவாகும் 3- வது திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் படம் வரும் மே அல்லது ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.