செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வந்த சாணிக்காயிதம் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது.
தமில் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கவுள்ளார். இதற்கிடையில், ஹீரோவாகவும் சாணிக்காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படபிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…