சமுத்திரக்கனியின் “ரைட்டர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்து வரும் ரைட்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியெறும் பெருமாள் படத்தினை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.இந்த படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தினை தயாரித்து அதுவும் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து 5 படங்களை தயாரிக்க உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டே அறிவித்திருந்தனர் .அந்த 5 படங்களையும் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகிய 5 இயக்குனர்கள் இயக்க உள்ளதாகவும் அறிவித்தனர் .
அந்த 5 படங்களில் தற்போது ஒரு படம் உருவாகி உள்ளது.’ரைட்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இவர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க 96′ படத்தின் மூலம் பிரபலமான புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் . விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளது . விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.