ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ஜன கன மன படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் பாதிக்கட்ட காட்சி மட்டும் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதால் இந்த இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஜன கன மன படத்தில் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹாலிவுட் அளவிற்கு சண்டைக்காட்சி இடம்பெறும் என்பதால் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்த படத்தில் பணியாற்றிவருகிறார்கள். கடந்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…