கொரோனாவை விரட்டியடித்த குட்டி நாடு.! 100 சதவீதம் ‘நோ’ கொரோனா.! ‘நோ’ உயிரிழப்பு.!
உலகின் மிக சின்னசிறு நாடாக அறியப்படும் ஃபிஜி தீவானது, தற்போது 100 சதவீதம் கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் கதிகலங்கி வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருப்பதால், பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் ஒரு குட்டி நாடு கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரும் மீண்டுவிட்டனர். மேலும், இதுவரை ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை.
அந்த நாட்டிற்கு பெயர் ஃபிஜி தீவு ஆகும். உலகின் மிக சின்னசிறு நாடாக இந்த நாடு அறியப்படுகிறது. இந்நாட்டில் தான் தற்போது 100 சதவீதம் கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.