இறந்த மனைவியின் சடலத்துடன் இரண்டு வாரமாக சண்டையிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்ட கணவர்.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரக்கூடிய தமிழ் குடும்பத்தினராகிய குகராஜ் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பூர்ணா காமேஸ்வரி மகன் கைலாஷ் குகராஜா ஆகிய மூவரும் லண்டன் மாநகரில் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மட்டும் யாருடனோ குகராஜ் சண்டை இடுவது போல சத்தம் கேட்டும் கதவு திறக்கப்படாமல் தொடர்ச்சியாக இந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து அந்த இடத்திற்கு வந்து கதவை போலீசார் தட்டியும், பல மணி நேரங்களாக கதவு திறக்கப்படாததால் சந்தேகித்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே இருந்த குகராஜ் கையில் கத்தியை வைத்து வெட்டியவாறு இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு அவரது அறையில் பரிசோதித்துப் பார்த்தபோது, அவரது மனைவி மற்றும் மூன்று வயது மகன் கைலாஷ் ஆகிய இருவரும் இறந்த நிலையில் அழகிய சடலமாக கிடந்துள்ளனர்.
எப்படியும் இவர்கள் இறந்து இரண்டு வாரம் வரை இருக்கலாம் என மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர். இந்நிலையில் இறந்த உடலுடன் இவர் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்? ஒருவேளை இவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்ற சில மணி நேரங்களிலேயே குகராஜ் சிதம்பரநாதன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…