உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்!அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை
நேற்று முன்தினம் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் தொடங்குகியது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை, நடப்பு ஆண்டில் ரஷ்யா முதன்முறையாக ஏற்று நடத்துகிறது. இந்த போட்டித் தொடரை நடத்த இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும்
ரஷ்யாவில் மாஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பர்க், கஸான் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் எகடெரின் பர்க் – கலினிங்கிராட் நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 2424 கிலோ மீட்டர். மாஸ்கோவுக்கும், லண்டனுக்கும் இடையே உள்ள தூரமும் இதே அளவுதான். மேலும் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் 6 மைதானங்கள் ஆசிய கண்டத்திலும், மீதமுள்ள 6 மைதானங்கள் ஐரோப்பிய கண்டத்திலும் உள்ளன. இப்படி இரு கண்டங்களிலும் நடைபெறும் முதல் உலக கோப்பை போட்டி இதுதான்.
போட்டிகள் நடைபெறும் ரஷ்ய உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள 12 மைதானங்களில் 9 மைதானங்கள், புதிதாகக் கட்டப்பட்டவை. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில், குறைந்தது 35 ஆயிரம் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இந்நிலையில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறலாம் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மைதானம், ரசிகர்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகளில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது என்றும் ரஷ்யா சென்றுள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்போடு இருக்குமாறு அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.