FIFA WORLD CUP 2018: இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் வெற்றி!
பரபரப்பான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆட்டத்தில் துனிசியா அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் ஜி- பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் துனிசியா அணிகள் மோதின. இங்கிலாந்து வீரர்கள் இரண்டு கோல்களைத் தவற விட்ட நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹாரி கேன் 11-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
35வது நிமிடத்தில் துனிசிய அணியின் பெர்சானி சஸ்சி, பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஹாரி இரண்டாவது கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஜி- பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் பனாமா அணியை பெல்ஜியம் அணி எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக காணப்பட்டது.
47வது நிமிடத்தில் டிரைஸ் மெர்டன்ஸ் ஒரு கோலும், 69ஆவது மற்றும் 75ஆவது நிமிடங்களில் ரொமேலோ லகாகு இரண்டு கோல்களும் அடிக்க பெல்ஜியம் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.