FIFA WORLD CUP 2018:பிரான்ஸ் அணி கோப்பை கைப்பற்றியது!4-2 கோல் கணக்கில் அபார வெற்றி!
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது .
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது.ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் குரேஷியாவின் மன்ட்ஜூகிக் சேம் சைடு கோலடித்தார். பின்னர் குரேஷிய அணி தனது முதல் கோலை அடித்தது.28வது நிமிடத்தில் பெரிசிக் கோலடிக்க 1-1 என குரேஷியா சமநிலையை பெற்றது .
1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்தது.பின் ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது.38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியில் கிரீஸ்மான் கோலடிக்க ,இதன் மூலம் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றுள்ளது.2-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலையில் உள்ளது.மேலும் போட்டியின் முதல் பாதி நிறைவடைந்தது.பின்னர் விளையாடிய பிரான்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் 3வது கோல் அடித்தது.இந்த கோலை பால் போக்பா அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது. 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் 3வது கோல் அடித்தது.இதன் பின்னர் பிரான்ஸ் அணி வீரர் மபே நான்காவது கோல் அடித்தார்.இதன் பின் குரேசியா வீரர் மரியோ கோல் அடித்தார். இறுதியில் ஆட்டம் 4- 2என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது.இதன் மூலம் பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. குரேஷியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.