FIFA World Cup 2018:ஒருவேளை இந்த உலககோப்பைதான் என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும்!லயனல் மெஸ்ஸி
ஜெயண்ட் கில்லர் ஐஸ்லாந்தை இன்று அர்ஜெண்டினா அணி முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. ‘லயன்’ மெஸ்ஸியைக் கண்டு ஐஸ்லாந்து கொஞ்சம் பயந்தாலும், அவரை முடக்கிவிடுவோம் என்று அந்த அணி வீரர் ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்னும் சில மணிநேரத்தில் ஆட்டம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் மெஸ்ஸி கூறியதாவது:
இந்த 4 ஆண்டுகளில் அணித்தேர்வில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரஷ்ய உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவும் போராடினோம். ஈக்வடாருக்கு எதிராக கடைசி போட்டியில் குவிட்டோவில்தான் இது சாத்தியமாயிற்று.
நன்றாகத் தயாரித்துள்ளோம், இந்த வாரம் முழுதும் நல்ல தயாரிப்பு, எங்களிடம் கிரேட் பிளேயர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் சவால் அளிப்போம். இதுதான் என் கடைசி உலகக்கோப்பையா என்று கேட்கின்றனர், ஆனால் அது எந்த உலகக்கோப்பையில் நாங்கள் எவ்வளவு தூரம்வரை செல்கிறோம் என்பதைப் பொறுத்தது.
சிறந்த கால்பந்து வீரர் விருதுகள் 5 பெற்றுள்ளேன், ஆனால் ஒரு உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்துக்காக அதனைத் துறக்கவும் தயாராக இருக்கிறேன். அந்த விருதுகளுக்கு மதிப்பு இல்லை என்று கூறவில்லை, தனிநபரை விட அணிதான் முக்கியம், நாடுதான் முக்கியம். ரஷ்யா உலகக்கோப்பைப் பின்னால் செல்வேன், உலகக்கோப்பைதான் எந்த ஒரு வீரருக்கும் சிறந்தது. இதுதான் உலகக்கோப்பையை வெல்ல எனக்கு உத்வேகம் அளித்து வருகிறது.இவ்வாறு கூறினார் மெஸ்ஸி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.