FIFA World Cup 2018:இனி இலவசமாக பார்க்கலாம்!போட்டி போட்டு இலவசத்தை வழங்கிய ஜியோ மற்றும் ஏர்டெல்!
உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகள் – ஜியோ டிவி ஆப் மற்றும் ஏர்டெல் டிவி செயலிகளில் இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என அறிவித்துள்ளன.
ரஷ்யாவில் நடைபெற இருக்கும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளை பயன்படுத்துவோர் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். கூடுதலாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் டிவி செயலியில் உலக கோப்பை 2018 கால்பந்து போட்டிகளை வாடிக்கையாளர்கள் வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் போட்டி அட்டவணை விவரங்களும் வங்கப்படுகிறது. போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் செயலியில் பார்த்து ரசிக்க முடியும். இலவச சேவைகளை பெற பயனர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
இதேபோன்று ஜியோ டிவி செயலியிலும் பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் டெஸ்ட் கிரிகெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும்.
ஜியோ டிவி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்து கோடிகளை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் டிவி செயலியை சுமார் ஐந்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஏர்டெல் டிவி ஆப் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.