FIFA WORLD CUP 2018:இங்கிலாந்து அணி அபார வெற்றி!ஸ்வீடன் வெளியேறியது!
நேற்றைய உலக கோப்பைகால்பந்து ஆட்டத்தில் இரண்டு காலிறுதி போட்டிகள் நடைபெற்றது.
முதலாவதாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.இந்த ஆட்டம் ரஷ்யாவில் உள்ள சமரா நகரில் நடைபெற்றது.பரபரப்பாக மோதிய இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
இறுதியாக ஆட்ட நேர முடிவில் 2 -0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.இதனால் இங்கிலாந்து அணி 28 வருடங்களுக்கு பின்னர் அரை இறுதிக்கு நுழைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.