FIFA WORLD CUP 2018:அனல் பறக்கும் மூன்று போட்டிகள் இன்று!
இன்று 3 போட்டிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற உள்ளன.
ஈ பிரிவில் நடைபெறும் ஆட்டமொன்றில் கோஸ்டாரிக்கா அணி பலம் வாய்ந்த செர்பிய அணியை எதிர்கொள்கிறது. செர்பிய அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளதால் அந்த அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் செர்பியா அணி வெற்றி பெற 50 சதவீதம் வாய்ப்புள்ளதாக கால்பந்து வல்லநர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு 8.30 மணிக்கு எப் பிரிவில் வலிமை வாய்ந்த அணியும் நடப்பு சாம்பியனுமான ஜெர்மனி அணி மெக்சிகோ அணியை எதிர்கொள்கிறது. நடப்பு கால்பந்து தொடரில் கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணியாக கருதப்படும் ஜெர்மனி அணி மெக்சிகோவை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெல்ல 66 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈ பிரிவில் நடக்கும் மற்றொரு போட்டியில் பிரேசில் அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. பிரேசில் அணி வலிமையுடன் களம் காணுவதால் அந்த அணியே வெற்றி பெற 69 சதவீதம் வாய்ப்புக்கள் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.