FIFA 2018 : கால்இறுதிக்கு போட்டி நாளை தொடக்கம்..!
FIFA 2018 உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது அதன் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது.2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நாளை இந்த போட்டி தடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கால்இறுதிக்கு போட்டியில் ரஷியா, பிரேசில், உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சுவீடன், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த காலிறுதியில் முதல் போட்டி நோவா கிராட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.இதில் உருகுவே-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
உருகுவே அணி இதுவரை நடந்த எந்தப்போட்டியிலும் தோல்வி எதையும் தழுவவில்லை. லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் எகிப்தையும், 1-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவையும், 3-0 என்ற கணக்கில் ரஷியாவையும் தோற்கடித்து இருந்தது.ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கலை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது உருகுவே அணி.
பலம் வாய்ந்த பிரான்சை வீழ்த்தி 6-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் உருகுவே உள்ளது.8 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதியில் நுழையும் வேட்கையில் உள்ளது.
உலக கோப்பையில் பிரான்சிடம் இதுவரை உருகுவே தோற்காததால் நம்பிக்கையுடன் உள்ளது. 3 முறை மோதி இருக்கிறது. இதில் 1 தடவை வென்றது. 2 ஆட்டம் டிரா ஆனது.