FIFA 2018 : அரை இறுதியில் மோதும் அணிகள்..!
FIFA 2018 : உலககோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. கடந்த மாதம் 28-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.அதைத்தொடர்ந்து கால்இறுதி ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 10-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில்; வெற்றிபெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.பிரான்ஸ் அணி 6-வது முறையாகவும், பெல்ஜியம் 2-வது முறையாகவும் அரை இறுதியில் மோதுகின்றன.
11-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் குரோஷியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.குரோஷியா 2-வது முறையாகவும், 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து 3-வது முறையாகவும் அரை இறுதியில் ஆடுகின்றன.