காதலரால் எரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணியவாதி! விசாரணையின் போது வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கான கேள்வி குறியாக தான் மாறியுள்ளது. அந்த வகையில், துருக்கியின் மென்டீஸ் பகுதியில் வசித்து வருபவர் பினார் குல்டெக் (27). இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை.
இந்நிலையில், இவரது காதலர் இவரை எரித்து கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதலரான செமல் மெடின் அவ்சி, சம்பவத்தன்று துண்டு துடான மாமிசங்களை எரித்து உள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி கெட்ட வாடை வருகிறது என்ன காரணம் என கேட்டுள்ளார். அதற்கு அவர், அது கேட்டு போன மாமிசம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மாயமான பெண்ணியவாதி குறித்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் சந்தேகத்தின் பேரில், மெர்ட்கன் அவ்சியின் மொபைல் அழைப்புகளை கண்காணித்து, பின்னர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, மெர்ட்கன் சம்பத்தன்று நடந்த எல்லாவற்றையும் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில், தனது சகோதரரின் மதுபான விடுதியில் உள்ள குளிர்பதனப் பெட்டி சேதமடைந்துள்ளதால், அதில் இருந்த மாமிசம் கெட்டுப்போனது தமக்கு தெரியும் என்பதால் சகோதரர் மீது சந்தேகம் எழவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஜூலை 21 ஆம் தேதி செமல் மெடின் அவ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துருக்கில் 27 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.