அமெரிக்காவில் புகழ்பெற்ற “பாக்ஸ் நியூஸ்” தொடலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளவர் கர்ட்னி பிரையல். இவர் சமீபத்தில் அதிபர் ட்ரம் மீது முத்த புகாரை கொடுத்து உள்ளார்.இந்த புகார் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கர்ட்னி தன்னுடைய செய்தியாளர் அனுபவங்களை தொகுத்து”டுநைட் அட் 10″ என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த புத்தகத்தில் ட்ரம்ப் அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பாக அழகிப் போட்டி நடத்தி வந்து உள்ளார்.
அந்த அழகி போட்டியில் நடுவராக கலந்துகொள்வது குறித்து ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியது குறித்து அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். அந்த உரையாடலில் தன்னை அலுவலகத்திற்கு வருமாறு அழைத்த ட்ரம்ப் இருவரும் முத்தமிடலாம் என கூறியதாகவும் , அவரின் அழைப்பை தான் நிராகரித்துவிட்டதாகவும் அந்த புத்தகத்தில் கர்ட்னி கூறியுள்ளார்.
கர்ட்னி புகார் குறித்து ட்ரம்ப் தரப்பில் இருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது அவர் மீது ஆபாச படநடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் மற்றும் பலர் பாலியல் புகார்களை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகளை…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…