லாபம் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றி பேசியுள்ளார்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்“. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றிபேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் ” இயக்குனர் ஜனநாதனின் இழந்த நிலையில் ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள உறவு தந்தை, மகன் உறவுபோல, அவர் இருக்கும்போது அவரது அருமை புரியவில்லை. அவர் மரணம் மூலம் காலம் கேவலமானது என உணர்கிறேன். முன்பே தெரிந்திருந்தால் அவர்கூட நிறைய நேரம் செலவு செய்திருப்பேன். அவர் ஒரு கதையைத் தொடங்குவார், இடையிலேயே கதையில் பல மாற்றங்களைச் செய்வார். இந்தப் படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. என் அப்பா, பாட்டன் செய்த புண்ணியத்தால் இப்படத்தில் நடித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…