உடல்நிலை சரியில்லாததால் அரசியலில் இருந்து பின்வாங்கி உள்ள ரஜினி நமது அழுத்தத்தால் கட்சி மீண்டும் துவங்கி அவருக்கு ஏதேனும் நடந்துவிட்டால் குற்ற உணர்வுடனேயே வாழ்நாளை கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ரஜினி ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சி புதியதாக தான் துவங்க உள்ளதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ரஜினிகாந்த். அதன்பின் அவரது உடல்நிலை காரணமாக ரஜினி கட்சி துவங்க போவதில்லை என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பின்வாங்கினார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து தற்போது அவரது ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களையும் அழைத்ததாகவும், ரஜினியின் முடிவை மாற்றுமாறு தன்னையும் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைத்த ரஜினி ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னையும் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்த ரஜினியின் ரசிகர்களுக்கு இது குறித்து தெளிவுபடுத்த தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் ரஜினியின் முடிவால் ரசிகர்களுக்கு எவ்வளவு வலி உள்ளதோ அதே வலி எனக்கு உள்ளது. இருப்பினும் அவர் வேறு ஏதேனும் காரணத்தை சொல்லி அரசியல் கட்சி தொடங்காமல் பின் வாங்கியிருந்தால் அவரை நானும் உங்களுடன் இணைந்து வற்புறுத்தி இருப்பேன், ஆனால் அவர் தனது உடல்நிலையை காரணமாக சொல்லி பின் வாங்கி இருக்கிறார். நமது வற்புறுத்தலால் அவர் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் அரசியல் கட்சி துவங்கி ஒருவேளை அவருக்கு ஏதேனும் நடந்து விட்டால் அந்த குற்ற உணர்வுடன் வாழ்நாள் முழுக்க வாழ முடியாது.
அவரது உடல்நிலை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் எனவும், அவர் அரசியல் அங்கு வரவில்லை என்றாலும் எப்போதும் அவர்தான் என்னுடைய குருநாதர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் அவரது நில்;ஆமையை புரிந்து கொண்டு அவருடைய ஆரோக்கியத்திற்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வதே நமது கடமை எனவும் அந்த அறிக்கையில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…