பிப்ரவரி 14 ஃபெப்சி சங்க தேர்தல் – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு.!

Default Image

வரும் 14-ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தேர்தல் நடைபெறும் என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளார் என மொத்தம் 13 நபர்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேலும், இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என கூறியுள்ளார். இதையடுத்து, அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கான நிதியை முதல்வர் பழனிசாமி வழங்கினார் என்றும் பிப் 24ம் தேதி அம்மா படப்பிடிப்பு தளம் திறக்கப்படும் எனவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்