#AppNews:என்னது ! வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு வசதியா ? வீடியோவை மியூட் பண்ணலாமா !?
வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.அதாவது ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் வீடியோவில் அதன் ஆடியோவை மியூட் பண்ணும் வசதியை பெறலாம்.
ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் வீடியோவில் அதன் ஆடியோவை மியூட்செய்ய கூகுள் ப்ளே-ஸ்டோரில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.ஆனால் IOS பயனாளர்களுக்கு இந்த வசதி தற்போது இல்லை.ஆனால் விரைவில் IOS இல் அறிமுகபடுத்தப்படும்.
முகநூலுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தனது 12ம் ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2009ம் ஆண்டிலிருந்து பயனாளர்கள் செய்திகள்,வீடியோ,ஆடியோ, கோப்புகள் அனுப்ப மற்றும் காலிங் செய்யும் வசதியைப் பெற்றிருந்தனர்.பிறகு மேலும் பணம் அனுப்பும் வசதியும் அறிமுகபடுதப்பட்டது.
அதன் வரிசையில் தற்போது பயனாளர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் வீடியோவில் அதன் ஆடியோவை மியூட்செய்யும் முறையை தொடங்கியுள்ளது.இந்த மியூட் செய்யும் வசதி நவம்பர் 2020இல்இருந்து பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரை உருவாக்கம் :எடிசன்